Skip to main content


இன்னும் என்ன என்ன எண்ணற்ற வழியில் நம்மை ஒடுக்க முயல்வார்கள், இயலாமையின் இமயம் ஆர்ய கற்பனை ஆதிக்க சக்தி !!

ஐந்து நிமிட வாசிப்பு - ஆலடி எழில்வாணன்

சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவ படிப்பு என்றார்கள் ! 
எங்களை சமஸ்கிருதம் படிக்ககூடாது என்றீர்கள்!!
இட ஒதுக்கீட்டால் நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்றீர்கள் ! 
நல்ல மதிப்பெண் எடுத்து முன்னேறிய போது NEET என்றீர்கள் !!
வீரத்தால் எங்களை வீழ்த்த இயலாத போது ! 
அறிவு தான் பெரிது என்றீர்கள் !!
நாங்கள் அறிவிலும் முன்னேறிய போது உங்கள் !
அறிவு தரமற்றது என்றீர்கள் !!

மாணவி அனிதாவின் இறப்பு உங்களின் இதயத்தை உலுக்கவில்லையா !!
எத்தனை ஆயிரம் அனிதாக்கள் தங்களின் கனவை புதைத்து புழுங்குவது கேட்கவில்லையா !!

நாளை வேளாண்மை கல்வி, பொறியியல், கலை அறிவியல், பட்டையப்படிப்பு, HSC, SSLC, ESLC, Primary மற்றும் குழந்தைகள் மையம் என பல பல தேர்வுகள் வைத்து நம்மை முடக்க பார்ப்பார்கள்.

ஆர்ய மாயை மாய்ந்து போகட்டும் !!
சமூகநீதி ! 
தாய்மொழி !! 
கல்வி !!!
இந்த மூன்றை கட்டுபடுத்தினால் தான் ஒரு இனத்தை அடக்க முடியும். இந்த மூன்றிலும் புறவாசல் வழியாக, சூழ்ச்சியால், ஆட்சி அதிகாரத்தால், துரோகத்தால் நம்மை அடக்கி அடிமைப்படுத்த பார்க்கின்றனர் மத்தியில் ஆளும் ஆர்ய வர்க்கம்.
உண்மையில் காமராசருக்கு பிறகு எந்த தேசிய கட்சியும் தமிழகத்தில் தேர்தலை தனித்து சந்தித்தால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாது. அதே சமயம் திராவிட இயக்கங்கள் ஒன்று சேர்ந்தால் 1000 யானைகளுக்கு சமம். 
வீழ்த்த இயலாத ஒரு இனத்தை, 
வெல்ல முடியாத ஒரு களத்தை, 
என்றும் ஆட்சி செய்யமுடியாத மாநிலத்தை 
ஒடுக்க பார்ப்பதின் விளைவுகளில் ஒன்று தான் NEET என்ற சமூக அநீதி.

கீழடி ஆராய்ச்சிக்கு தடை
சமஸ்கிருத ஆராய்ச்சிக்கு அதிக நிதி 
சல்லிகட்டு மற்றும் மாட்டு இறைச்சிக்கு தடை
NEET வாயிலாக மாநில உரிமை, கல்வி அபகரிப்பு 
மைல்கல்லில் இந்தி, எதற்கெடுத்தாலும் AADHAR

மக்களாட்சியில் எல்லா மாநிலத்தின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற வேண்டும். இதை அரசியல், ஆட்சி, அதிகாரம், கட்சி இவைகளை கடந்து சிந்திக்க வேண்டும். இந்த NEET தேர்வை தமிழகத்திற்கு தளர்த்தினால், நீக்கினால் மத்திய அரசுக்கு நற்பெயர் வரும் வாய்ப்பை ஏன் அறியாமல் பிடிவாதமாக இருக்கிறார்கள்? இங்கே உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடி மாநில உரிமையை மீட்க வேண்டாமா ? இதனால் அனைவருக்குமே நன்மை தானே ?

வேற்றுமையில் ஒற்றுமை அது தான் இந்தியா. மாநிலத்தின் உணர்வை, உரிமையை உதாசீனமாக கருதும் ஆர்ய மத்திய அரசு; தமிழகத்தை மாற்றான்
தாய் மனப்பான்மையுடனே கையாளுகிறது. மாநில அரசோ ஆட்சியை தக்கவைப்பதற்கும், உட்கட்சி பூசலை சாமாளிப்பதை மட்டுமே முழுநேர வேலையாக கொண்டுள்ளனர். இதற்கு தீர்வு திராவிட இயக்கத்தின் அடிப்படை ஐந்து கொள்கைகளை மீண்டும் உயர்த்தி ஆர்ய மாயை தமிழகத்தை விட்டு விரட்டியடிக்க வேண்டும்.

அண்ணா வழியில் அயராது உழைப்போம்
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம்
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் 
வன்முறை தவிர்த்து வறுமையை ஒழிப்போம்
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி

இந்த ஐம்பெரும் கொள்கைகளை நடுவண் அரசு மதிக்காவிடில் மலரும் தனிநாடு! தன்னாட்சி !!

இது தான் காலத்தின் கட்டாயம் !!
படைப்போம் புதிய தமிழ் அத்தியாயம் !!
வெல்க தமிழ் ! மலர்க தனி தமிழ்நாடு !!
வாசித்த செய்திகள், தலைவர்களின் பேச்சுக்கள் என் இன உணர்வுடன் சேர்த்து அமைந்தது இந்த பதிவு.
முடிந்தவரை பகிரவும்.

ஆலடி எழில்வாணன்

Comments

Popular posts from this blog

“பவள விழாவில் கிடைத்த ரெஸ்பான்ஸ்” - அடுத்த திட்டத்தில் வைகோ! நீண்ட நாள்களுக்குப் பிறகு தி.மு.க மேடையில் ஏறிய வைகோவுக்கு, அதே மேடையில் கிடைத்த ரெஸ்பான்ஸினால் உற்சாகத்தில் உள்ளார்.  முரசொலியின் பவள விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி மழையினால் பாதியுடன் முடிக்கப்பட்ட இந்த விழாவை இரண்டாவது முறையாக நடத்தியது தி.மு.க. மழையால் கூட்டம் நிறுத்தப்பட்டதன் பலனை வைகோ அறுவடை செய்துவிட்டார். நிறுத்தப்பட்ட விழாவில் வைகோவின் பெயர் அழைப்பாளர்கள் பட்டியலில் இல்லை. ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் தி.மு.க-வுடன் நெருக்கமானார்   வைகோ . கருணாநிதியை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்தார். இதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா இரண்டாவது முறையாக நடைபெற இருந்ததில் வைகோவின் பெயரும் இடம்பெற்றது. தி.மு.க-வின் மேடையில் பல ஆண்டுகளுக்குப் பின் ஏறப்போகும் உற்சாகம் வைகோவிடம் ஏற்பட்டது. சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற முரசொலி பவள விழாவில் அனைத்துத் தலைவர்களுக்கும் சேர் போடப்பட்டிருந்தது. சேரில் தலை...