Skip to main content

Posts

Showing posts from 2017
சிவன் கஞ்சா குடிப்பவரா ? அவர் போதையில் இருப்பது உண்மைதானா ? சிவன் தன் கையில் கஞ்சாவை வைத்துக்கொண்டிருப்பது போல பல படங்கள் இணையத்தில் இருக்கின்றன . அதோடு அவர் எந்நேரமும் போதையில் தான் இருப்பார் என்று சிலர் கூறுவதும் உண்டு . இதற்கான விடையை நாம் அறிவியல் ரீதியாக ஆராய்வோம் வாருங்கள் . இந்த காலத்தில் பலர் போதைக்கு அடிமையாகி மடிகின்றனர் . அவர்கள் மதுவை அருந்துவதற்கு காரணமே போதையில் இருக்க வேண்டும் என்பதற்காக தான் . ஆனால் மதுவை அருந்திய சில மணி நேரங்களிலேயே அவர்கள் மயங்கி விழுவதுண்டு . சிவனும் போதையில் தான் இருக்கிறார் . அதனால் தான் அவருக்கும் சோமேஸ்வரர் என்றொரு பெயரும் உண்டும் . சோமம் என்றால் போதை என்று தானே அர்த்தம் . ஆனால் அவர் போதைக்காக எதையும் அருந்துவது கிடையாது , போதையில் இருக்கும்போது மயங்குவதும் கிடையாது . இது சாத்தியமா என்றால் ? சாத்தியமே . அமெரிக்க விஞ்ஞானிகள் , சில வருடங்களுக்கு முன்பு மனிதனின் மூலை குறித்து ஒரு ஆய்வு செய்தனர் . அந்த ஆய்வின் முடிவில் அவர்களுக்கு ஒரு அற்பு...
மாஸ்டர் பீஸ்... பகுதி 4..................... தென்னக மொழிகளில் நிறைய படங்கள் இயக்கி இருந்தாலும் தம் தமிழ் சினிமாவுக்கு இவரது பங்களிப்பு அளப்பரியது.. அவர்தான் பழம்பெரும் இயக்குநர் பி.ஆர். பந்துலு.. தானே ஒரு தயாரிப்பாளராகவும் இருந்த காரணத்தினால் இயக்குநராக முழு சுதந்திரம் பெற்றவராக விளங்கினார்... நடிகர் திலகத்தை வைத்து தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், கர்ணன், முரடன் முத்து, பலே பாண்டியா ஆகிய படங்களையும் திலகம் கௌரவ நடிகராக தோன்றிய குழந்தைகள் கண்ட குடியரசு ஆகிய படங்களையும் இயக்கியவர்.. பெருமை மிகு படங்களை தந்த இவர் துரதிஷ்டவசமாக திலகத்தை பிரிய நேர்ந்தது.. பிறகு எம் ஜி ஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன், நாடோடி, ரகசிய போலிஸ், தேடி வந்த மாப்பிள்ளை ஆகிய படங்கள் உட்பட வேறு சில நடிகர்கள் நடித்த படங்களையும் இயக்கினார்.. இதில் ஆயிரத்தில் ஒருவன் படம் தவிர மற்ற படங்களை முதல் சுற்றுலேயே ஃபில்டர் பண்ணி விடலாம்.. தங்கமலை ரகசியம்தான் நம்மவர் காம்பினேஷனில் முதல் படம் .. படவசூல் நிறைவைத் தந்த காரணத்தால் தொடர்ச்சியாக சிவாஜியை வைத்து படங்கள் தயாரித்து இயக்கத் துவங்கி...
இன்னும் என்ன என்ன எண்ணற்ற வழியில் நம்மை ஒடுக்க முயல்வார்கள் , இயலாமையின் இமயம் ஆர்ய கற்பனை ஆதிக்க சக்தி !! ஐந்து நிமிட வாசிப்பு - ஆலடி எழில்வாணன் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவ படிப்பு என்றார்கள் !   எங்களை சமஸ்கிருதம் படிக்ககூடாது என்றீர்கள் !! இட ஒதுக்கீட்டால் நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்றீர்கள் !   நல்ல மதிப்பெண் எடுத்து முன்னேறிய போது NEET என்றீர்கள் !! வீரத்தால் எங்களை வீழ்த்த இயலாத போது !   அறிவு தான் பெரிது என்றீர்கள் !! நாங்கள் அறிவிலும் முன்னேறிய போது உங்கள் ! அறிவு தரமற்றது என்றீர்கள் !! மாணவி அனிதாவின் இறப்பு உங்களின் இதயத்தை உலுக்கவில்லையா !! எத்தனை ஆயிரம் அனிதாக்கள் தங்களின் கனவை புதைத்து புழுங்குவது கேட்கவில்லையா !! நாளை வேளாண்மை கல்வி , பொறியியல் , கலை அறிவியல் , பட்டையப்படிப்பு , HSC, SSLC, ESLC, Primary மற்றும் குழந்தைகள் மையம் என பல பல தேர்வுகள் வைத்து நம்மை முடக்க பார்ப்பார்கள் . ஆர்ய மாயை மாய்ந்து போகட்டும் !! சமூகநீதி !...