Skip to main content


“பவள விழாவில் கிடைத்த ரெஸ்பான்ஸ்” - அடுத்த திட்டத்தில் வைகோ!


நீண்ட நாள்களுக்குப் பிறகு தி.மு.க மேடையில் ஏறிய வைகோவுக்கு, அதே மேடையில் கிடைத்த ரெஸ்பான்ஸினால் உற்சாகத்தில் உள்ளார். 

முரசொலியின் பவள விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி மழையினால் பாதியுடன் முடிக்கப்பட்ட இந்த விழாவை இரண்டாவது முறையாக நடத்தியது தி.மு.க. மழையால் கூட்டம் நிறுத்தப்பட்டதன் பலனை வைகோ அறுவடை செய்துவிட்டார். நிறுத்தப்பட்ட விழாவில் வைகோவின் பெயர் அழைப்பாளர்கள் பட்டியலில் இல்லை. ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் தி.மு.க-வுடன் நெருக்கமானார் வைகோ. கருணாநிதியை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்தார். இதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா இரண்டாவது முறையாக நடைபெற இருந்ததில் வைகோவின் பெயரும் இடம்பெற்றது. தி.மு.க-வின் மேடையில் பல ஆண்டுகளுக்குப் பின் ஏறப்போகும் உற்சாகம் வைகோவிடம் ஏற்பட்டது.
சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற முரசொலி பவள விழாவில் அனைத்துத் தலைவர்களுக்கும் சேர் போடப்பட்டிருந்தது. சேரில் தலைவர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. வைகோவுக்கு முதல் வரிசையில், தி.க தலைவர் வீரமணிக்கு அருகில் இருக்கை போடப்பட்டிருந்தது. ஐந்து மணிக்குத் துவங்கிய கூட்டத்துக்கு ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் விழா துவங்கும்போதே ஆஜர் ஆகிவிட்டனர். திருமாவளவன் உள்ளிட்டவர்கள் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மேடைக்கு வந்தனர். முதல்வரிசை இருக்கையில் அனைத்து இருக்கைகளிலும் தலைவர்கள் அமர்ந்த பிறகு வைகோவின் இருக்கை மட்டும் காலியாக இருந்தது. வைகோ வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வியும் தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், இறுதியாக ஆறுமணியளவில் வைகோ மேடைக்கு என்ட்ரி கொடுத்தார். தி.மு.க. மேடையில் வைகோ என்றதை தி.மு.க-வினரே ஆச்சர்யமாகத்தான் பார்த்தனர். வைகோவை எழுந்து நின்று வரவேற்றார் ஸ்டாலின்.
வைகோவைப் பேச அழைத்தபோது, நீண்ட நாள்களுக்குப் பிறகு தி.மு.க-வின் மேடையில் பேசப்போகும் பேச்சு என்பதால், பேச்சின் ஆரம்பத்தில் இருந்தே முழு கூட்டத்தையும் தன் பேச்சில் கட்டிப்போட வேண்டும் என்ற வேட்கை வைகோவிடம் இருந்தது. “கருணாநிதி மேடையில் இருக்கும் நிலையில்தான் இதுவரை நான் பேசியிருக்கிறேன். முதல்முறையாக அவர் இல்லாத இந்த மேடையில் அவர் இருப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டே இப்போதும் பேச்சை துவக்குகின்றேன்” என்று சென்ட்டிமென்டாக வைகோவின் பேச்சு ஆரம்பித்தது. 
தனக்கும் கருணாநிதிக்கும் இடையே இருந்த உறவு பற்றியே வைகோவின் பேச்சு இருந்தது. குறிப்பாக நெருக்கடி நிலை காலத்தில் சிறையில் இருந்தபோது முரசொலி இதழில் கருணாநிதி எழுதிய தலையங்கம் பற்றி வரிசையாக பட்டியிலிட்டு கிளாப்ஸ் வாங்கினார் வைகோ.
மேலும், 'அண்ணாவின் நம்பிக்கைப் பெற்றவர் அண்ணன் கலைஞர்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 'பொடாவில் இருந்து  தான் வெளியே வரும் நேரத்தில், “பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியே வா” என்று கருணாநிதி எனக்காக முரசொலியில் எழுதியதை என்னால் மறக்க முடியாது' என்று உருக்கமாக உரையாற்றினார். முரசொலியில் கருணாநிதி எழுதிய பல்வேறு தலையங்கங்களைப் பற்றி வைகோ உணர்ச்சிகரமாகப் பேசியது தி.மு.க தொண்டர்களையே உற்சாகமடையச் செய்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தி.மு.க. மேடையில் ஏறக் கிடைத்த வாய்ப்பைக் கச்சிதமாக பற்றிக்கொண்டுவிட்டார் வைகோ. வைகோவின் பேச்சில் ஒரேயொரு முறை ஸ்டாலினை வரவேற்றுப் பேசியதோடு அவ்வளவுதான். அதன்பிறகு அவர் பேச்சு முழுவதும் கருணாநிதி, தன் மீது எந்த அளவுக்கு பிரியம் வைத்திருந்தார் என்று பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியே இருந்தது. தி.மு.க-வின் மேடையில் வைகோவின் பேச்சு அனைவரையும் கட்டிப்போடும் வகையில் இருந்தது. தி.மு.க-வினர் தந்த ரெஸ்பான்ஸ்சும் வைகோவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

இன்னும் என்ன என்ன எண்ணற்ற வழியில் நம்மை ஒடுக்க முயல்வார்கள் , இயலாமையின் இமயம் ஆர்ய கற்பனை ஆதிக்க சக்தி !! ஐந்து நிமிட வாசிப்பு - ஆலடி எழில்வாணன் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவ படிப்பு என்றார்கள் !   எங்களை சமஸ்கிருதம் படிக்ககூடாது என்றீர்கள் !! இட ஒதுக்கீட்டால் நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்றீர்கள் !   நல்ல மதிப்பெண் எடுத்து முன்னேறிய போது NEET என்றீர்கள் !! வீரத்தால் எங்களை வீழ்த்த இயலாத போது !   அறிவு தான் பெரிது என்றீர்கள் !! நாங்கள் அறிவிலும் முன்னேறிய போது உங்கள் ! அறிவு தரமற்றது என்றீர்கள் !! மாணவி அனிதாவின் இறப்பு உங்களின் இதயத்தை உலுக்கவில்லையா !! எத்தனை ஆயிரம் அனிதாக்கள் தங்களின் கனவை புதைத்து புழுங்குவது கேட்கவில்லையா !! நாளை வேளாண்மை கல்வி , பொறியியல் , கலை அறிவியல் , பட்டையப்படிப்பு , HSC, SSLC, ESLC, Primary மற்றும் குழந்தைகள் மையம் என பல பல தேர்வுகள் வைத்து நம்மை முடக்க பார்ப்பார்கள் . ஆர்ய மாயை மாய்ந்து போகட்டும் !! சமூகநீதி !...