மாஸ்டர் பீஸ்... பகுதி 4..................... தென்னக மொழிகளில் நிறைய படங்கள் இயக்கி இருந்தாலும் தம் தமிழ் சினிமாவுக்கு இவரது பங்களிப்பு அளப்பரியது.. அவர்தான் பழம்பெரும் இயக்குநர் பி.ஆர். பந்துலு.. தானே ஒரு தயாரிப்பாளராகவும் இருந்த காரணத்தினால் இயக்குநராக முழு சுதந்திரம் பெற்றவராக விளங்கினார்... நடிகர் திலகத்தை வைத்து தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், கர்ணன், முரடன் முத்து, பலே பாண்டியா ஆகிய படங்களையும் திலகம் கௌரவ நடிகராக தோன்றிய குழந்தைகள் கண்ட குடியரசு ஆகிய படங்களையும் இயக்கியவர்.. பெருமை மிகு படங்களை தந்த இவர் துரதிஷ்டவசமாக திலகத்தை பிரிய நேர்ந்தது.. பிறகு எம் ஜி ஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன், நாடோடி, ரகசிய போலிஸ், தேடி வந்த மாப்பிள்ளை ஆகிய படங்கள் உட்பட வேறு சில நடிகர்கள் நடித்த படங்களையும் இயக்கினார்.. இதில் ஆயிரத்தில் ஒருவன் படம் தவிர மற்ற படங்களை முதல் சுற்றுலேயே ஃபில்டர் பண்ணி விடலாம்.. தங்கமலை ரகசியம்தான் நம்மவர் காம்பினேஷனில் முதல் படம் .. படவசூல் நிறைவைத் தந்த காரணத்தால் தொடர்ச்சியாக சிவாஜியை வைத்து படங்கள் தயாரித்து இயக்கத் துவங்கினார்.. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டித் தந்த படம் சபாஷ் மீனா.. முழுநீள நகைச்சுவைச் சித்திரமான இந்தப்படம் மிகவும் முக்கியமான படம்தான்... அப்போது ஒரு விஷயம் உணர்ந்தார்.. சிவாஜி சினிமாக்கள் எந்தக்காலத்திலும் நம்மை ஏமாற்றி விடாது என்ற தைரியத்தில் வரலாற்றுப் புகழ் பெற்ற வீரபாண்டிய கட்ட பொம்மனை உருவாக்கினார்.. தரத்திலும் வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது.. இந்தியாவை கடந்து ஒரு படம் உலக சினிமாவாக பரிமளி்த்த படமாக கட்ட பொம்மன் விளங்கியது...
அடுத்ததாக கப்பலோட்டிய தமிழனை உருவாக்கினார்.. கட்டபொம்மனைப்போல தரத்தில் உயர்ந்த படம்தான் ஆனால் ஏனோ குறைந்த பொருட் செலவில் படத்தை நிறைவு செய்தார்.. வரலாற்று ஆவணங்களை செல்லூலாய்டில் பதிவேற்றம் செய்யும் போது பிரம்மாண்டம் தவிர்க்க இயலாதது.. பந்துலு அதை செய்யவில்லை.. எதிர் நோக்கிய வெற்றி இல்லாவிட்டாலும் முதலுக்கு மோசமில்லை.. ஆனால் பொருள் நஷ்டம் என்ற புரளி கிளப்பப் பட்டது.. ஆனால் நம்மவர் அதற்காக குறுகிய காலப்படமாக பலே பாண்டியாவில் நடித்துக் கொடுத்து பந்துலுவை மனநிறைவு அடையச் செய்தார்... மிக குறுகிய காலத்தில் மிக குறைந்த பட்ஜெட்டில் நல்ல வசூலை அள்ளித் தந்தது பலே பாண்டியா... "பலே கணேசா" என்று பெயர் வைத்திருக்க வேண்டிய படம்.. மும்மூர்த்திகளாக வந்து நகைச்சுவையில் முத்திரை பதித்தார் நம்மவர்.. அதன் வெற்றிதான் கர்ணனை மாபெரும் பொருட் செலவில் தயாரிக்கும் தெம்பைக் கொடுத்தது.. கர்ணன் இன்னொறு வலராறு ஆனது.. அதன் வெற்றி பலரது புருவங்களை உயர வைத்தது.. அதே சமயம் சிவாஜி மீது ஒருவருக்கு காழ்ப்புணர்வு கொள்ள வைத்தது.. மறுபடியும் திட்டம் தீட்டி ஒரு பொய் பிரச்சாரம் நடத்தப்பட்டது.. இருந்தாலும் பந்துலுவுக்கு உதவி புரிந்தார் நம்மவர்... குறைந்த செலவில் முரடன் முத்து படத்திற்கு முழு மனதுடன் கால்ஷீட் கொடுத்தார்.. முரடன் முத்து படமும் பந்துலுவுக்கு செல்வம் வாரி வழங்கியது...
இவ்வளவு செய்தும் என்ன பலன் சூழ்ச்சி சலங்கை கட்டி ஆடியது துரோகம் தூளி கட்டி ஆடியது.. பத்துலு அதற்கு செவி சாய்க்காமல் இருந்திருந்தால் இன்னும் பல வரலாற்று நாயகர்களை நாம் தரிசித்து இருக்க முடியும்.. அதிக பொருட் செலவில் ஆயிரத்தில் ஒருவனை எடுத்தார்.. என்ன புண்ணியம் ஒரு மசாலா இயக்குநராகத்தான் அந்தப்படம் பந்துலுவை காட்டியது.. அவ்வளவு செலவிட்டு தயாரித்து இயக்கம் செய்தும் சென்னையைத் தவிர வேறெங்கும் எல்லையை கடக்கவில்லை என்பது வரலாறு.. ஆயிரத்தில் ஒருவன் பயங்கர கலெக்ஷன் என்றால் ஏன் குறைந்த பொருட் செலவில் நாடோடி என்ற படத்தை இயக்க வேண்டும்.. எங்கப்பன் குதுறுக்குள்ளே இல்லை என்ற கதைதான்.. பிரம்மாண்ட வெற்றி என்பதுகூட புரளிதானோ என்னவோ... மற்ற இரு படங்கள் ரகசிய போலிஸ் மற்றும் தேடிவந்த மாப்பிள்ளையும்.. 1970 உடன் பந்துலுக்கு குட் பை சொல்லிட்டார் எம் ஜி ஆர்.. அப்போது நினைவில் வந்திருப்பார் நம்மவர்.. என்ன பயன் கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழி பந்துலுவுக்கு பொருந்தி வந்தது.. ஆனால் நம்மவர் 70களில் மோஸ்ட் வாண்ட்டடு ஹீரோ ஆகிட்டாரே.. தேடி வந்திருந்தால் பந்துலுவுக்கு உதவியிருப்பார்.. வீம்பு, நாணம் இரண்டும் அவரை தடுத்து இருக்கக் கூடும்...
இப்போது மாஸ்டர் பீஸ் எது என்பதற்கு வருவோம்.. என்னைப் பொறுத்தவரை பந்துலு அவர்கள் சிவாஜியை வைத்து இயக்கிய 7 பங்களுமே நல்ல படங்கள்தான்.. ஆனாலும் எலிமினேஷனில் ஆயிரத்தில் ஒருவன் படம் உட்பட சிவாஜி படங்கள் நான்கை தவிர்த்து விட்டுப் பார்த்தால் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், கர்ணன் ஆகிய மூன்றும் ஃபைனலில் நிற்கிறது.. என்னால் இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய இயலாது... 1,2,3 என்றுகூட வரிசைப்படுத்த இயலாது.. முக்கனியில் எக்கனியில் சுவை என்பது சொல்ல முடியாது... ஆகவே இம்மூன்றையும் போட்டியில் வைத்து விட்டு கட்டுரையை முடிக்கிறேன்.. நண்பர்களே தேர்வு செய்யட்டும்.

Comments
Post a Comment