Skip to main content
நமது பத்ரகாளி அம்மனின் பெருமைகள் :-
பத்ரகாளியம்மன் கோவிலில் அன்னையின் அஷ்டபுஜங்களில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரரூபமான சூலாயுதம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், தலை, மணிகளை தாங்கிய தண்டையணி பொன்சலங்கை அணிந்து வலதுகால் மேலூன்றி,
மூக்கில் மின்னும் மூக்குத்தியும், பவளமாய் ஜொலிக்கும் புன்சிரிப் புடனும், அக்னி மகுடமும், குண்டலமும் அணிந்து தேவியாய், பத்ரகாளியாய் அனைவருக்கும் அருள்புரிகின்றாள்.
அன்னையை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். வித்தை, புத்தி சித்திக்கும். அஷ்டமாசித்திகளும் அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும்.
மேலும் பாவ தோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தை பேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
மேலும் மனநோய் பாதித்தவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் நோய் நீங்குகிறது. பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன் கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்தால் அவைகள் நீங்கிவிடுகிறது.
கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நீங்க பக்தர்கள் வீபூதி பெற்று செல்கின்றனர்.' மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.

Comments

Popular posts from this blog

இன்னும் என்ன என்ன எண்ணற்ற வழியில் நம்மை ஒடுக்க முயல்வார்கள் , இயலாமையின் இமயம் ஆர்ய கற்பனை ஆதிக்க சக்தி !! ஐந்து நிமிட வாசிப்பு - ஆலடி எழில்வாணன் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவ படிப்பு என்றார்கள் !   எங்களை சமஸ்கிருதம் படிக்ககூடாது என்றீர்கள் !! இட ஒதுக்கீட்டால் நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்றீர்கள் !   நல்ல மதிப்பெண் எடுத்து முன்னேறிய போது NEET என்றீர்கள் !! வீரத்தால் எங்களை வீழ்த்த இயலாத போது !   அறிவு தான் பெரிது என்றீர்கள் !! நாங்கள் அறிவிலும் முன்னேறிய போது உங்கள் ! அறிவு தரமற்றது என்றீர்கள் !! மாணவி அனிதாவின் இறப்பு உங்களின் இதயத்தை உலுக்கவில்லையா !! எத்தனை ஆயிரம் அனிதாக்கள் தங்களின் கனவை புதைத்து புழுங்குவது கேட்கவில்லையா !! நாளை வேளாண்மை கல்வி , பொறியியல் , கலை அறிவியல் , பட்டையப்படிப்பு , HSC, SSLC, ESLC, Primary மற்றும் குழந்தைகள் மையம் என பல பல தேர்வுகள் வைத்து நம்மை முடக்க பார்ப்பார்கள் . ஆர்ய மாயை மாய்ந்து போகட்டும் !! சமூகநீதி !...
“பவள விழாவில் கிடைத்த ரெஸ்பான்ஸ்” - அடுத்த திட்டத்தில் வைகோ! நீண்ட நாள்களுக்குப் பிறகு தி.மு.க மேடையில் ஏறிய வைகோவுக்கு, அதே மேடையில் கிடைத்த ரெஸ்பான்ஸினால் உற்சாகத்தில் உள்ளார்.  முரசொலியின் பவள விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி மழையினால் பாதியுடன் முடிக்கப்பட்ட இந்த விழாவை இரண்டாவது முறையாக நடத்தியது தி.மு.க. மழையால் கூட்டம் நிறுத்தப்பட்டதன் பலனை வைகோ அறுவடை செய்துவிட்டார். நிறுத்தப்பட்ட விழாவில் வைகோவின் பெயர் அழைப்பாளர்கள் பட்டியலில் இல்லை. ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் தி.மு.க-வுடன் நெருக்கமானார்   வைகோ . கருணாநிதியை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்தார். இதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா இரண்டாவது முறையாக நடைபெற இருந்ததில் வைகோவின் பெயரும் இடம்பெற்றது. தி.மு.க-வின் மேடையில் பல ஆண்டுகளுக்குப் பின் ஏறப்போகும் உற்சாகம் வைகோவிடம் ஏற்பட்டது. சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற முரசொலி பவள விழாவில் அனைத்துத் தலைவர்களுக்கும் சேர் போடப்பட்டிருந்தது. சேரில் தலை...